உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்கள் சிலம்பத்தில் வெற்றி

கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்கள் சிலம்பத்தில் வெற்றி

மதுரை; மதுரையில் நடந்த பள்ளிகளுக்கிடையேயான சிலம்ப போட்டிகளில் கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பரிசுகள் வென்று அசத்தினர். மதுரை டி.ஏ.ஏ.சி., பள்ளியில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பப் போட்டிகள் நடந்தன. இதில் பெண்களுக்கான 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒற்றைக்கொம்பு வீச்சு பிரிவில் மிருணாலிகா சவுக்கியும், 19 வயதிற்குட்பட்ட இரட்டைக்கம்பு வீச்சில் விஜயதர்ஷினியும் முதல் பரிசை வென்றனர். 12 வயதிற்கு உட்பட்டோருக்கான இரட்டைக்கம்பு வீச்சில் சாதனாஸ்ரீ இரண்டாம் பரிசும், 14 வயதிற்குட்பட்ட இரட்டைக்கம்பு வீச்சில் சர்மிளாவும்,19 வயதிற்குட்பட்ட ஒற்றைக்கம்பு வீச்சில் சிவதர்ஷினி மூன்றாம் பரிசையும் வென்றனர். ஆண்களுக்கான 17 மற்றும் 14 வயதிற்குட்பட்ட இரட்டைக்கம்பு வீச்சில் சித்தார்த், ஹர்ஷவர்த்தன் மூன்றாம் பரிசை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ