உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே ஆதனுார் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அக்.16ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை