உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கும்பாபிஷேக ஆலோசனை

கும்பாபிஷேக ஆலோசனை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தொடர்பான அறங்காவலர் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார். துணைக் கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், ராமையா பங்கேற்றனர். சத்யபிரியா கூறுகையில், ''கும்பாபிஷேக பணிகள், அதற்கான செலவுகள், உபயதாரர்களை அணுகுவது, தை மாதம் பாலாலயம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கும்பாபிஷேக பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்து அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணி துவங்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை