வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உத்திரவாதம் என்பது உங்களது வோட்டு தான்
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் தரிசு நிலங்கள் சுத்தம் செய்யப்பட்டு விவசாயப்பணிகளுக்கு தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.நீண்ட காலமாக வானம் பார்த்த பூமியாக இருந்த உசிலம்பட்டி பகுதி கிராமங்கள் 58 கிராம கால்வாய் மூலமாக சில ஆண்டுகளாக கிடைத்த தண்ணீரால் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் நிறைந்துள்ளது. கடந்த பருவத்தில் கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து இல்லாமல் போனாலும் பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது.பெரும்பாலான கண்மாய்களுக்கும் நீர் வரத்து கிடைத்துள்ளதால் மானாவாரி நிலங்களில் நெல் விவசாயம் செய்து அறுவடை நடந்து வருகிறது. எ.புதுப்பட்டி, கருத்திவீரன்பட்டி, பசுக்காரன்பட்டி பகுதிகளில் இரண்டாம் போகத்திற்கு நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர கண்காணிக்கப்படாமல் சீமைக்கருவேல மரங்கள் இருந்த நிலங்களை சீர்படுத்தி விவசாயப்பணிகளுக்கு தயார்படுத்தும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.அதேசமயம் ஆண்டு தோறும் 58 கிராம கால்வாயில் தண்ணீர் வருவதற்கான உத்தரவாதத்தை அரசு கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உத்திரவாதம் என்பது உங்களது வோட்டு தான்