காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சுபா சாந்தி தெரிவித்துள்ளதாவது: கொட்டாம்பட்டி பகுதிகளில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 534 காப்பீடு செய்தால் பயிர் பாதிப்பிற்கு ரூ. 35 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்கப்படும். ஜன. 31 காப்பீடு செய்ய கடைசி நாள். விவசாயிகள் ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.