மேலும் செய்திகள்
விளைநிலங்களில் சாய்ந்த நிலை மின்கம்பங்கள்
14-Nov-2024
பப்ளிக் டாய்லெட்டின் பரிதாபங்கள்!
29-Oct-2024
விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டியில் பழுதடைந்த புதிய மின் கம்பங்களில் இணைப்புகளை மாற்ற மின்வாரியத்தினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.இக்கிராமத்தில் 6 மாதங்களுக்கு முன் பலத்த காற்று வீசியபோது கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் ஒயர் அறுந்து விழுந்தது. பழுதடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தரும்படி கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். மெயின் ரோடு, வடக்கு, தெற்கு, மேற்கு தெருவில் 10க்கும் மேற்பட்ட அபாய மின் கம்பங்கள் அருகே புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டன. தற்போது 6 மாதங்களைக் கடந்தும் ஒயர் இணைப்பை மாற்றவில்லை. இப்பகுதி மக்கள் அச்சத்துடனே வசிக்கின்றனர். முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களில் இணைப்புகளை புதிய மின் கம்பங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.
14-Nov-2024
29-Oct-2024