உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு

மதுரை : மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரியில் செயலர் ஹரி தியாகராஜன் தலைமையில் கருமுத்து தியாகராஜர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. சிறப்பு விருந்தினர் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் 'தனியடியார்களும், தொகையடியார்களும்' என்ற தலைப்பில் பேசினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பியின் பக்தியையும் எடுத்துக்கூறி தொன்மையோடு கூடிய தொடர்ச்சியே தமிழ் மொழியின் சிறப்பு என்றார். கல்லுாரி முதல்வர் பாண்டியராஜன், தமிழ்த் துறை தலைவர் காந்திதுரை, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி தமிழ்த்துறை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை