உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எலுமிச்சை விலை சரிவு

எலுமிச்சை விலை சரிவு

பேரையூர்: பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, சந்தையூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு ஓரளவு மழை பெய்ததால் காய்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது.இப்பகுதியில் விளையும் எலுமிச்சை உள்ளூர் விற்பனை போக, மதுரை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடந்தாண்டு கிலோ ரூ.100க்கும் மேல் விற்ற எலுமிச்சை, தற்போது ரூ.10க்கு விற்பனை ஆகிறது. விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு கோடை மழை கை கொடுத்ததால் எலுமிச்சை நன்றாக விளைச்சல் கண்டுள்ளது. ஆனால் எப்போதும் கோடை காலத்தில் எலுமிச்சைக்கு விலை கிடைக்கும். இந்தாண்டு விலை குறைந்து உள்ளது. தற்போது வியாபாரிகள் எலுமிச்சையை கிலோ ரூ. 5க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் பல விவசாயிகள் எலுமிச்சையை பறிக்காமல் விட்டுள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை