உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ‘பார்’ ஆக மாறிய நுாலகம்

‘பார்’ ஆக மாறிய நுாலகம்

மேலுார்: எட்டிமங்கலத்தில் செயல்படும் நுாலகம் சரிவர செயல்படாமல் இருளாக இருப்பதால் மது அருந்தும் ‘பாராக’ மாறி வருகிறது. இக்கிராமத்தின் நுழைவாயிலில் ஊராட்சி, வி.ஏ.ஓ., தபால் அலுவலகம், நுாலகம் செயல்படுகிறது. சுந்தரராஜபுரம், கவட்டையம்பட்டி, முத்துவேல்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வருகின்றனர். சமீபகாலமாக சரியாக நுாலகம் திறப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. வாசகர்கள் கூறியதாவது: பெயரளவில் எப்போதாவது நுாலகத்தை திறக்கின்றனர். கிராம மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு 5 கி.மீ., துாரத்தில் உள்ள மேலுார் நுாலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. நுாலக வாசல் இருட்டாக இருப்பதால் குடிமகன்கள் தினமும் வாசலில் அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில் மது பாட்டில்களை உடைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தினமும் நுாலகத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை