உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாழவைக்கும் வாழை இலை

வாழவைக்கும் வாழை இலை

சோழவந்தான் : வாழை இலைகளில் பரிமாறப்படும் உணவு ஆரோக்கியத்தை தருவது மட்டுமின்றி வாழை பயிரிடும் விவசாயிகளுக்கும், அதில் இலைகளை அறுவடை செய்யும் தொழிலாளர்களுக்கும் நல்ல வருமானத்தை தருகிறது.வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. வாழை பயிரிட்ட 7ம் மாதத்தில் இருந்து வளர்ச்சிக்கேற்ப ஒன்று முதல் மூன்று நாள் இடைவெளியில் இலையை அறுவடை செய்யலாம். தரம் மற்றும் சீசனுக்கு ஏற்ப ஒரு கட்டு ரூ.800 முதல் ரூ.3000 வரை விற்பனையாகும்.வத்தலக்குண்டு கருப்பையா: என் சிறுவயது முதல் இலை அறுக்கும் தொழில் செய்கிறேன். 70 வயதில் மீண்டும் இலை அறுக்க வந்துவிட்டேன். எங்கள் பகுதி கமிஷன் கடைகளில் இருந்து இடத்தை சொல்லுவார்கள். வேலைக்கு ஏற்ப ஆட்கள் வந்து இலைகளை அறுத்து கட்டி வைத்துவிடுவோம்.ஒரு கட்டுக்கு ரூ.200 கூலி, காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிக்குள் 5 கட்டுகள் கட்டுவோம். இலை அறுக்கும் வேலை இருந்துகொண்டே இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை