உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடன் தருவதாக மோசடி: 11 பேர் கைது

கடன் தருவதாக மோசடி: 11 பேர் கைது

அவனியாபுரம்: நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார், திருச்சி கோபாலகிருஷ்ணனிடம் ரூ. 5 கோடி கடன் கேட்டுள்ளார். கோபாலகிருஷ்ணன் நண்பர்களிடம் கடன் வாங்கி தருவதாகவும் ரூ. 15 லட்சம் கமிஷன் வேண்டும் என உதயகுமாரிடம் கேட்டுள்ளார்.அதற்கு உதயகுமாரும் சம்மதித்துள்ளார். மதுரை விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.நேற்று இரவு கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் ஒரு காரில் ஓட்டலுக்கு வந்தனர். உதயகுமாரிடம் காரில் ரூ.5 கோடி பணம் இருக்கிறது. அதற்கான கமிஷன் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். உதயகுமார் காரில் சென்று பார்த்தபோது ஒரு பையில் மேல்பகுதியில் 500 ரூபாய் நோட்டுகளும் கீழே வெள்ளை பேப்பர் கட்டுகளும் இருந்ததை கண்டார்.அவனியாபுரம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். கோபாலகிருஷ்ணன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ