உள்ளாட்சி தேர்தல்: முதல்வருக்கு மனு
மேலுார்: வலைச்சேரிபட்டி சமூக ஆர்வலர் சரவணன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: 2019 டிசம்பர் இறுதியில் மாநில தேர்தல் ஆணையம் மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 2025 ஜன. 5 ல் முடிவடைகிறது. எனவே வரும் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.ஊராட்சி தலைவர்கள் இருந்தால் மட்டுமே மத்திய அரசிடம் நிதி பெறமுடியும். இனி நடக்க உள்ள தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவரை பொதுமக்களே ஓட்டளித்து தேர்வு செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.