மேலும் செய்திகள்
லோக் அதாலத்தில் ரூ.53.01 கோடி இழப்பீடு
14-Sep-2025
மதுரை:உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த 'லோக் அதாலத்'தில் 6032 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.118 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 887 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி ஆர்.பூர்ணிமா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சொக்கலிங்கம், ஆனந்தி, நம்பி, சிவசுப்பிரமணியன், பூபாலன், உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் காஜா முகைதீன், கிருஷ்ணவேணி, முகமது முகைதீன், அரசு டாக்டர் அழகு ராஜேஷ் விசாரித்தனர். 359 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 54 வழக்குகளில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. ரூ.79 கோடியே 14 லட்சத்து 92 ஆயிரத்து 933 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பதிவாளர் (நீதித்துறை) ஐயப்பன் ஏற்பாடு செய்திருந்தார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் நடந்தது. மதுரை, உசிலம்பட்டி , மேலுார், திருமங்கலம், வாடிப்பட்டி, பேரையூர் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. மாவட்ட நீதிபதிகள் நாகராஜன், ரோகிணி, அல்லி, உதயவேலவன், சார்பு நீதிபதிகள் பாரதிராஜா, காமராஜ், முத்து இசக்கி, சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள், சிவில் நீதிபதிகள் விசாரித்தனர். 5989 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 5978 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. ரூ.39 கோடியே 16 லட்சத்து 99 ஆயிரத்து 954 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. குடும்ப நல வழக்குகளில் 4 தம்பதியினரிடையே சமரசம் ஏற்பட்டது. சேர்ந்து வாழ சம்மதித்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரசாத் ஏற்பாடு செய்திருந்தார்.
14-Sep-2025