உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை- சினிமா- 26.05

மதுரை- சினிமா- 26.05

சுவாசிகாவிடம் அதிகாலையில்சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமிசூரி நடிப்பில் வெளியான 'மாமன்' படத்தில் சூரியின் அக்காவாக சுவாசிகாவும், மனைவியாக ஐஸ்வர்ய லட்சுமி யும் நடித்திருந்தனர். அப்போது ஐஸ்வர்ய லட்சுமிக்கு தனது நடிப்பின் மீது சந்தேகம் ஏற்பட அதிகாலை 3:00 மணியளவில் நடிகை சுவாசிகாவுக்கு மெசேஜ் செய்து, “நான் நல்ல நடிகை என்று நினைக்கிறீர்களா. என் வேலையை நான் சரியாக செய்து வருகிறேனா” என்று கேட்டாராம். இதனை சுவாசிகா புரமோஷன் நிகழ்ச்சியின்போது தெரிவித்தார். இது குறித்து பேசிய சூரி ''ஒவ்வொரு கலைஞர்களுக்கும் இதுபோன்ற சந்தேகம் எழுவது இயல்புதான். ஐஸ்வர்ய லட்சுமி நிச்சயமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்'' என்றார்.ஏழரை மணி நேர 'கேம் சேஞ்ஜர்' எடிட்டர் விலகிய காரணம்மலையாள சினிமாவின் இளம் எடிட்டர் ஷமீர் முகம்மது. இவர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி நடித்து வெளியான 'கேம் சேஞ்ஜர்' படத்தின் எடிட்டராக இருந்து பின்னர் பாதியில் விலகினார். இதற்கான காரணம் குறித்த ஷமீர் கூறுகையில், ''இயக்குனர் ஷங்கர் பணியாற்றும் விதம் பிடிக்கவில்லை. அது ஒரு பயங்கரமான அனுபவம். படத்தின் முதல்கட்ட நீளம் ஏழரை மணி நேரமாக இருந்தது. அதை 3 மணி நேரமாக குறைத்தேன். நான் விலகியதும் வேறொரு எடிட்டர் இன்னும் குறைத்தார்'' எனக் கூறியுள்ளார்.'சர்தார் 2' அப்டேட் கொடுத்த மாளவிகா மோகனன்மலையாளத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபாஸ் உடன் 'ராஜா சாப்', மோகன்லால் உடன் 'ஹிருதயபூர்வம்', கார்த்தி உடன் 'சர்தார் 2' படங்கள் கைவசம் உள்ளன. இதில் சர்தார் 2 பற்றிய கேள்விக்கு மாளவிகா அளித்த பதில்: பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. ஜூன் மாதம் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். தமிழில் எனது அடுத்த படம் பற்றி சர்தார் 2க்கு பிறகு அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.கமல் ஒரு ஏணி: சிம்பு பெருமிதம்மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்த 'தக் லைப்' படம் ஜூன் 5ல் ரிலீசாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, ''படத்தில் நான் பேசிய ஒரு டயலாக்கை வைத்து கமலுக்கு அடுத்து சிம்புதான் என பலரும் கூறுகின்றனர். கஷ்டப்பட்டு, உழைத்து, நெட்டையாக, குட்டையாக, அசிங்கமாக, அழகாக விதவிதமாக நடித்துதான் கமல் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. கமலை ஒரு ஏணியாக பார்க்கிறேன். அவரை மதித்துதான் மேலே செல்வேனே தவிர, மிதித்து அல்ல'' எனப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை