உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி பூங்காக்கள் நிலை சேகரிப்பு

மாநகராட்சி பூங்காக்கள் நிலை சேகரிப்பு

மதுரை : மாநகராட்சி கமிஷனர் உத்தரவை தொடர்ந்து, மதுரையில் பூங்காக்களின் தற்போதைய நிலை குறித்து சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமாக 62 பூங்காக்கள் உள்ளன. பராமரிப்பு இல்லாமல், அழிந்து வருகின்றன. கமிஷனர் நடராஜன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பூங்காக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் விபரம் சேகரித்து வருகின்றனர். விரைவில் அனைத்து பூங்காகளும், புதுப்பொலிவு பெற உள்ளன. மாநகராட்சி கமிஷனர் நடராஜன் கூறியதாவது: பூங்காக்களின் குறைகள் சரிசெய்து, மேம்பாட்டு பணி தொடங்கும். அதன்பின், பராமரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ