உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எஸ்ஸார் கோபி, சகோதரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

எஸ்ஸார் கோபி, சகோதரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மதுரை : மதுரை அவனியாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில் கைதான தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி, அவரது சகோதரர் ஈஸ்வரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இக்கொலை வழக்கில் எஸ்ஸார் கோபி, சகோதரர்கள் ஈஸ்வரன், மருது, அவனியாபுரம் நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், ராஜரத்தினம், காதர்நவாஷ், வீரபத்திரன், சீனிவாசன், மணி, கருணாநிதி உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மருது தலைமறைவாக உள்ளார். மற்றவர்கள் சிறையில் உள்ளனர். தி.மு.க., மற்றொரு தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ் உத்தரவுப்படி, இக்கொலையை செய்ததாக, எஸ்ஸார் கோபி வாக்குமூலமும் அளித்தார்.எஸ்ஸார் கோபி மீது திருமங்கலத்தில் நில அபகரிப்பு வழக்கு உள்ளது. ஈஸ்வரன் மீது அடிதடி வழக்குள்ளது. இந்நிலையில் எஸ்ஸார் கோபி, ஈஸ்வரனை குண்டர் சட்டத்தில் அடைக்க, எஸ்.பி., ஆஸ்ரா கர்க் பரிந்துரைத்தார். அதை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ