உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா

மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நவராத்திரி கலை விழா நேற்று துவங்கியது. அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரத்தினசபாபதி, அவிநாசிநாதர் குழுவினர் திருமுறை இசை, மாலா, அர்ச்சனா குழு பரதநாட்டியம், மதுமிதா மிஸ்ரா ஒடிசி நடனம், பேராசிரியர் ஞானசம்பந்தன் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தக்கார் கருமுத்து தி.கண்ணன், செயல் அலுவலர் ஜெயராமன் பங்கேற்றனர். இன்று மாலை 5 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர், நாளை ஊஞ்சல், அக்.,1 மேருவைச் செண்டால் அடித்தல், 2- மீனாட்சி பட்டாபிஷேகம், 3-பார்வதி திருக்கல்யாணம், 4- மஹிஷாசுரமர்த்தினி, 5- சிவபூஜை அலங்காரங்களில் அம்மன் காட்சியளிக்கிறார். இந்நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இசைக்கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. அக்.,6 விஜயதசமி அன்று 108 வீணை இசையுடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
செப் 20, 2025 18:23

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டாரா சாமி.


Moorthy
செப் 19, 2025 10:52

திரை துறையில் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர் இயற்கை எய்தியுள்ளார் துணை முதல்வர் உட்பட பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர் ஆனால் தளபதி விஜய் எந்த நாட்டில் உள்ளார் என்றே தெரியவில்லை ஆற அமர ஒரு அறிக்கை வெளியிட்டு தன் துயரத்தை வெளிப்படுத்துவார் கூண்டை விட்டு வெளிய வாங்க விஜய் உங்கள் ஆமை வேகம் தமிழ்நாட்டு அரசியலில் எடுபடாது இங்கே ஆளும் கட்சியும், எதிர் கட்சிகளும் சிறுத்தை வேகத்தில் பயணிக்கின்றன ஒன்று களப்பணி ஆற்றுங்கள் இல்லையேல் சூப்பர் ஹீரோ வேலையை பாருங்கள், உச்சத்திலேயே இருங்கள் கீழ்நிலை மக்களுக்கான அரசியல் உங்களுக்கு ஒத்து வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை