வெள்ள நிவாரணம் வழங்க சென்ற போது மதுரை பொறியாளர் பலி;
மதுரை: மதுரை விளாச்சேரி ரமேஷ்பாபு 55. இவர் மாநகராட்சி மண்டலம் 3 பொறியாளராக பணிபுரிந்தார்.நேற்று விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்க டிப்பர் லாரியில் சென்றார். நேற்றிரவு 7:00 மணியளவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோயில் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி டிவைடரில் மோதி கவிழ்ந்தது. காயம் அடைந்த ரமேஷ்பாபு சம்பவயிடத்திலேயே இறந்தார். டிரைவர் கற்பகராஜா 33, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.