உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை கோரிப்பாளையம், மேலமடை மேம்பாலப்பணி ஜரூராக நடக்குது! நெடுஞ்சாலை, மாநகராட்சி, மின்வாரியம் கைகோர்ப்பு

மதுரை கோரிப்பாளையம், மேலமடை மேம்பாலப்பணி ஜரூராக நடக்குது! நெடுஞ்சாலை, மாநகராட்சி, மின்வாரியம் கைகோர்ப்பு

மதுரை: மதுரையில் கோரிப்பாளையம், மேலமடை சந்திப்புகளில் புதிதாக அமையும் மேம்பாலங்களின் தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டது.மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சந்திப்பு பகுதிகளான கோரிப்பாளையம், மேலமடை பகுதிகளில் முறையே ரூ.177 கோடி, ரூ.150 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிக போக்குவரத்து உள்ள பகுதிகள் என்பதால் விரைந்து பணியை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோாரிப்பாளையம் பகுதியில் தற்போது அமெரிக்கன் கல்லுாரி முன்பு ஒரு வழிப்பாதையில் துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. அதில் பூமிக்கடியில் 'பைல்'கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலங்களுக்கு அவைதான் அடித்தளமாக அமையும் என்பதால் அவற்றின் தாங்கு திறன் சோதனை (பைல்ஸ் லோட் டெஸ்ட்) நேற்று நடந்தது.இப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கே.ரமேஷ், கோட்டப் பொறியாளர்கள் மோகனகாந்தி, பிரசன்னவெங்கடேசன் (தரக்கட்டுப்பாடு), உதவி கோட்டப் பொறியாளர்கள் சுகுமார், மைதிலி (தரக்கட்டுப்பாடு) ஆய்வு செய்தனர். மேலமடை சந்திப்பு பகுதியில் உதவி கோட்டப் பொறியாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் பாலத்தின் தாங்கு திறன் சோதனையை நடத்தி ஆய்வு செய்தனர்.இப்பணியில் அமெரிக்கன் கல்லுாரி பகுதியில் பாதாள சாக்கடைக்கு மாற்றாக புதிய குழாய்கள் பொருத்தும் பணியை மாநகராட்சி முடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு, மீனாட்சி கல்லுாரி பகுதிகளில் மின்கம்பங்கள் அகற்றும் பணிகளும் முடிந்துள்ளன. விரைவில் தற்போதுள்ள ஏ.வி.பாலத்திற்கு இணையாக மீனாட்சி கல்லுாரி முதல் வைகையின் தென்கரை பகுதிக்கு மற்றொரு பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகளில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை