உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பரவையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

பரவையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

பரவை : பரவை பகுதி ரேஷன் கடைகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, மக்களிடம் குறைகள் கேட்டார். பரவை, ஊர்மெச்சிக்குளம், சத்தியமூர்த்திநகர் பகுதி ரேஷன் கடைகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். அங்கு கூடியிருந்த மக்கள் கூடுதல் ரேஷன்கடை, அண்ணாநகரில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைத்தல், ஊர்மெச்சிக்குளத்தில் இருந்து பெரியார் நிலையம் வழியாக திருப்பரங்குன்றத்திற்கு புதிய பஸ் வழித்தடம் ஏற்படுத்த கோரி அமைச்சிரிடம் மனுக்கள் தந்தனர். கூடுதல் ரேஷன் கடைகள் செயல்பட அமைச்சர் உடனடி அதிகாரிகளுக்கு உத்திரவிட, உடனே கடைகள் திறக்கப்பட்டது. பரவை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மக்களிடம் பெற்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு செய்யப்படுவதாக அமைச்சர் உறுதியளித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ராஜா, திரவியம், நிர்வாக அதிகாரி இப்ராஹிம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ