உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைவினை கண்காட்சி

கைவினை கண்காட்சி

மதுரை: மத்திய கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி கமிஷன், 'சிப்போ' சார்பில் அகில இந்திய கைவினை பொருட்கள் கண்காட்சி (காந்தி ஷில்ப் பஜார்) மதுரை காந்தி மியூசிய மைதானத்தில் துவங்கியது. கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி கமிஷன் தென் மண்டல இயக்குனர் ராமமூர்த்தி துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் மகாலிங்கம், சிப்போ மேலாண்மை இயக்குனர் ராஜகோபால், திட்ட அலுவலர் நீலவள்ளி பங்கேற்றனர். கற்சிலைகள், பனை ஓலை பொருட்கள், டோக்ரா காஸ்டிங், சணல் மற்றும் மர வேலைப்பாடுகள், பிரம்பு, மூங்கில்களால் செய்யப்பட்ட பொருட்கள், மண்பாண்டங்கள், கண்ணாடி பொம்மைகள், எம்பிராய்டரி சால்வைகள், கேரளா நார் பொருட்கள், ஜம்மு காஷ்மீர் காகித கூழினால் ஆன பொருட்கள், நகைகள், உல்லன் கார்பெட்ஸ் உட்பட பல்வேறு பொருட்கள் 150 அரங்குகளில் இடம் பெற்றுள்ளன. ஆக.,7 வரை தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ