உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

மதுரை: ''வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ( பி.டி.ஓ.,) மாதத்தில் 20 நாட்கள் கிராமங்களுக்குச் சென்று, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மீறுவோருக்கு 'மெமோ' வழங்கப்படும்,'' என கலெக்டர் சகாயம் பேசினார்.மதுரையில் மின்வாரிய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும். கால்வாய்களை பாதுகாத்து, அதிகளவில் மரக்கன்றுகளை நட்டால் கரைகளில் மழையால் அரிப்பு ஏற்படாது. இதில், ஊராட்சி நிர்வாகங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பல கிராமங்களில் இயங்காத நூலகங்களை, முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருமங்கலம் நகராட்சி, நிலுவையின்றி மின் கட்டணம் செலுத்தியுள்ளது. இதை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்திய விபர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மின் இணைப்பு கோரியுள்ள விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். ஊராட்சிகளில் நிதியை முறையாக, விதிகளுக்குட்பட்டு தலைவர்கள் பயன்படுத்துகின்றனரா? என கண்காணிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ( பி.டி.ஓ.,) மாதத்தில் 20 நாட்கள் கிராமங்களுக்குச் சென்று, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மீறுவோர் மீது 17 (பி) சார்ஜ் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை