உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு ஆஸ்பத்திரியில் பணிநிறைவு விழா

அரசு ஆஸ்பத்திரியில் பணிநிறைவு விழா

மதுரை:மதுரை அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் நேற்று பணிஓய்வு பெற்றார். துணை கண்காணிப்பாளர் ராமானுஜம் பொறுப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பணிநிறைவு நாள் கூட்டத்திற்கு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மீனா முன்னிலை வகித்தார். ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழி பெருமாள், பிரகதீஸ்வரன் மற்றும் துறை தலைவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். புதிய கட்டடம்: மதுரை அரசு ஆஸ்பத்திரியின் புதிய விரிவாக்கக் கட்டடம் ஆக., 3 முதல் செயல்பட உள்ளது. இந்த கட்டடத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக தற்போதைய ஏ.ஆர்.எம்.ஓ., காந்திமதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி