உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜெனரேட்டர்களுக்குமானியத் தொகை

ஜெனரேட்டர்களுக்குமானியத் தொகை

மதுரை:சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஜெனரேட்டர் வாங்கினால், மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத் தொகை வழங்கப்படுகிறது.125 கே.வி.ஏ., திறனுடைய ஜெனரேட்டர்களுக்கு அதன் மதிப்பில் 25 சதவீதமும், அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. விலைப்பட்டியல் நகல், விற்பனையாளர் சான்றிதழ், மின்ஆய்வாளரிடம் இருந்து பெறப்பட்ட பாதுகாப்பு சான்றிதழ், பகுதி2 ஒப்புகை நகல், வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் ஆணை நகல் மற்றும் நிறுவன பங்குதாரர் பத்திர நகல்களுடன், மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். பொதுமேலாளர் மருதப்பன் கூறுகையில்,'' நடப்பு நிதியாண்டில் மதுரை மாவட்டத்திற்கு மானியத்தொகையாக 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் இத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை