உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இந்து முன்னணிஆர்ப்பாட்டம்

இந்து முன்னணிஆர்ப்பாட்டம்

மதுரை:இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக கூறி சன் 'டிவி'யை கண்டித்து, மதுரை உத்தங்குடி அருகே நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட பொது செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். தலைவர் பரமசிவம், செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். புறநகர் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஏ.பி.வி.பி., அமைப்பு செயலாளர் ஆதிசேஷன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து பேசினர். விரைவில், மீனாட்சி அம்மன் கோயில் அருகே உண்ணாவிரதம் நடத்த இந்து முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி