உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ நுழைவுத் தேர்வைரத்து செய்ய வலியுறுத்தல்

மருத்துவ நுழைவுத் தேர்வைரத்து செய்ய வலியுறுத்தல்

மதுரை:மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியது.சங்க பொதுச் செயலாளர் ஜெயலால் அறிக்கை: மருத்துவ கல்லூரிகளில் பிளஸ்2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதில் கிராமப்புற மாணவர்களுக்கும் சீட் கிடைக்கிறது. சமீபத்தில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்த உள்ளதாக 6பேர் கொண்ட தற்காலிக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.இந்த நுழைவுத்தேர்வு மத்திய கல்வி பாடத்திட்டத்தில் நடைபெறுகிறது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடைபெறுவதால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எந்த அடிப்படை வாய்ப்புகளையும் கொடுக்காமல் உயர்தர மக்களை திருப்திப்படுத்தும் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்,என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை