| ADDED : ஆக 14, 2011 04:40 AM
மதுரை:மதுரையில் ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகத்தின் அடிக்கல் நாட்டு விழா
பங்காரு அடிகளார் தலைமையில் ஆக.,16ல் நடக்கிறது.மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் அசோகன் கூறியதாவது:பத்தாண்டுக்கு
பின் பங்காரு அடிகளார் இன்று மதுரை வருகிறார். தெப்பக்குளத்தில் மாலை
நடக்கும் ஆன்மிக ஊர்வலத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்
செந்தில்குமார் துவக்கி வைக்கிறார். பங்காரு அடிகளார் ஆசி வழங்குகிறார்.
தபால்தந்திநகர், பாலமேட்டில் சக்திபீடம் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
ஆக.,16ல் சிலைமான் புளியங்குளத்தில் ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகத்தின்
அடிக்கல் நாட்டு விழா பங்காரு அடிகளார் தலைமையில் நடக்கிறது.
இக்காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு வழங்கப்படும்
என்றார்.செந்தமிழ் கல்லூரி செயலாளர் குருசாமி, ஆன்மிக இயக்க பிரசாரக்குழு இணை செயலாளர் சடாச்சர பாண்டியன், செய்தி தொடர்பாளர் முருகானந்தம் உடனிருந்தனர்.