உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம்

மதுரையில் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம்

மதுரை : மதுரையில் காந்தியவாதி அன்னா ஹசாரேயின், லோக்பால் கோரிக்கையை ஆதரித்து, ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் 'நம்நாடு மக்கள் மீட்பு பேரவை' சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.பேரவை தவைர் தமிழரசன் தலைமை வகித்தார். தமிழக இந்து துறவிகள் பேரவை அமைப்பாளர் சுவாமி சதாசிவானந்தா துவக்கி வைத்தார். புனித மேரி அன்னை ஆலய பாதிரியார் அருள், இஸ்லாமிக் எஜூகேஷனல் டிரஸ்ட் தலைவர் அமானுல்லா முன்னிலை வகித்தனர்.ஊழலை ஒழிப்பதற்காக பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என அன்னா ஹசாரே மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்றுக்கொள்ளாமல் அரசு அடக்குமுறையால் , அவரை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் வரையில் இப்போராட்டம் அன்னா ஹசாரே வழிகாட்டுதலில் நடைபெறும், என மீட்பு பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டது.நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ஜெகதீஸ்வர் பாண்டியன், குறிஞ்சி லயன்ஸ் சங்க தலைவர் வீரணசாமி, நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர் ராமமூர்த்தி, லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர் சங்கர நாராயணன், டாக்டர் மாதவன், நம்நாடு மக்கள் மீட்பு பேரவை பொது செயலாளர் கணேசன், பொருளாளர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை