உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அங்கன்வாடி கட்டடம் பழுதால் கலையரங்கத்தில் குழந்தைகள்

அங்கன்வாடி கட்டடம் பழுதால் கலையரங்கத்தில் குழந்தைகள்

மதுரை : மதுரை மாவட்டம் உத்தங்குடியில் அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுமளவுக்கு மோசமாக இருப்பதால், குழந்தைகள் தற்காலிகமாக கலையரங்க மேடையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஊராட்சி ஒன்றியம் உத்தங்குடியில் இரு அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. முதல் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகள், இரண்டாவது மையத்தில் 20 குழந்தைகள் படிக்கின்றனர். இதற்காக பஸ் ஸ்டாப் எதிரிலுள்ள சந்தில் பழைய பள்ளி கட்டடத்தில் இரு மையங்கள் செயல்பட்டன. இரண்டாவது மைய கட்டடம் மிக மோசமாக இருக்கிறது. மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன. இதனால் இக்கட்டடம் மூடப்பட்டது. தற்காலிகமாக குழந்தைகள் ஊராட்சி அலுவலம் அருகே கலையரங்க கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் இருந்து குழந்தைகளை, மெயின் ரோட்டை கடந்து அழைத்து வர வேண்டியுள்ளது. பழைய பள்ளி கட்டடமும் மோசமாகவுள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு கட்டடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி