உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதிய இடவசதியில்லாதபோலீஸ் ஸ்டேஷன்

போதிய இடவசதியில்லாதபோலீஸ் ஸ்டேஷன்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போதிய இட வசதி இல்லாததால் ஓய்வெடுக்க முடியாமல் போலீசார் அவதிப்படுகின்றனர். இந்த ஸ்டேஷனில் 45 போலீசார் பணிபுரிகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அழைக்கப்படும் சிறப்பு போலீசார்களும் இந்த ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அனைத்து போலீசாருக்கும் ஓய்வெடுக்க ஒதுக்கப்பட்டுள்ள அறை போதியதாக இல்லை. இந்த அறையில் போலீசார்களின் உடமைகளை வைக்கவே இடம் உள்ளது. எனவே ஓய்வு நேரங்களில் ஸ்டேஷனில் ஓய்வெடுக்க முடியாமல் போலீசார் அவதிப்படுகின்றனர். கூடுதல் இடவசதி செய்து கொடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ