உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் பேச்சு

மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் பேச்சு

மதுரை : மதுரையில் சேடப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 791 பேருக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள சிறப்பு ஊக்கத்தொகைக்கான பத்திரங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.விழாவில் அவர் பேசியதாவது :தமிழக மாணவர்கள் கல்வியில் உலகத்தரம் வாய்ந்த கல்வி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. உயர் படிப்பை தொடர முடியாமல் பாதியில் விட்டுச் செல்வதை தடுக்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மொத்தம் 85,446 மாணவர்களுக்கு ரூ.13.99 கோடி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 791 பேருக்கு ரூ.13.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி எதைபற்றியும் கவலைப்படாமல் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி மாணவர்கள் சிறந்தவர்களாக திகழ வேண்டும், என்றார். கலெக்டர் சகாயம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை