உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர் ஆதாரங்களை பாதுகாக்க வாரியம் பொறியாளர் கழகம் வலியுறுத்தல்

நீர் ஆதாரங்களை பாதுகாக்க வாரியம் பொறியாளர் கழகம் வலியுறுத்தல்

மதுரை : 'மதுரையைச் சுற்றி நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்,' என இந்திய பொறியாளர் கழகம் வலியுறுத்தியது. மதுரையில் இதன் கிளையில் பொறியாளர் தின விழா நடந்தது. தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) சிவசுப்பிரமணியன்,''எத்தகைய பேரழிவையும் எதிர்கொள்ளும் வகையில், மிக பாதுகாப்பான அணு உலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளன,'' என்றார். மதுரையைச் சுற்றி நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். பொறியியல் சார்ந்த துறைகள், நிறுவனங்களில் பொறியாளர்களை துறைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அண்ணா தொழில்நுட்ப பல்கலை பதிவாளர் பெருமாள் பிள்ளை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ராஜூ அபய்குமார், அருணா ஸ்டீல் அலாய் நிறுவன நிர்வாக இயக்குனர் அருணாச்சலம், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் எஸ்.விஜயகுமார், மின்வாரிய முன்னாள் தலைமைப் பொறியாளர் திருவேங்கடராமானுஜ தாஸ், மும்பை அணுசக்தி ஹெவிவாட்டர் வாரிய முன்னாள் இயக்குனர் அருள்தாஸ் கந்தையா ஆகியோருக்கு 'சீர்மிகு பொறியியலறிஞர்' விருதுகள் வழங்கப்பட்டன. செயலாளர் ராஜாமணி, இணைச் செயலாளர் கே.விஜயகுமார், முன்னாள் தலைவர் சக்கரபாணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை