உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புறக்கணிக்கப்படும் பல்கலை கல்லூரி

புறக்கணிக்கப்படும் பல்கலை கல்லூரி

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை ஆண்டிபட்டி உறுப்புக் கல்லூரி ஆசிரியர்கள் நியமனம், சம்பளத்திற்கு தமிழக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக முற்றிலும் நிதி ஒதுக்காமல் புறக்கணித்துள்ளது. அகில இந்திய அளவில் உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கை 12 சதவீதமாக உள்ளது. அது எந்தெந்த பகுதியில் 5 சதவீதத்திற்கு குறைவாக உள்ளதோ, அங்கு பல்கலை உறுப்புக் கல்லூரிகள் துவங்க பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) அனுமதிக்கிறது. நிலம், கட்டுமான பணிக்கு யு.ஜி.சி., தமிழக அரசு 8 கோடி ரூபாய் வழங்குகிறது. இதன்படி 2001-06 அ.தி.மு.க., ஆட்சியில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மதுரை காமராஜ் பல்கலை உறுப்புக் கல்லூரி துவங்கப்பட்டது. ஆசிரியர் நியமனம், சம்பளத்திற்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கப்படும் என அ.தி.மு.க., ஆட்சியில் உறுதியளிக்கப்பட்டது. பின் தி.மு.க., ஆட்சியில் ஐந்தாண்டுகளில் முற்றிலும் ஆண்டிபட்டி கல்லூரிக்கு நிதி ஒதுக்கவில்லை. இவ்வகையில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. பல்கலை நிதி மூலம் சமாளிக்கப்படுகிறது. பல்கலை வரவு- செலவில் வரவுக்கு மேல் உள்ள செலவினங்களுக்கு, தமிழக அரசு மொத்த மானியம் வழங்குகிறது. மதுரை காமராஜ் மற்றும் சென்னை பல்கலைகளுக்கு மட்டும் இது பொருந்தும். இதன்படி, தமிழக அரசிடமிருந்து 2009-10 ல் 9 கோடி, 2010-11 ல் 11 கோடி, மொத்தம் 20 கோடி ரூபாய் மதுரை காமராஜ் பல்கலைக்கு பல்வேறு திட்ட செலவினங்களுக்காக வரவேண்டிஉள்ளது. இது பற்றி ஆய்வு செய்ய, பல்கலை நிதி அலுவலர்களை அரசு நிதிச் செயலாளர் சென்னைக்கு அழைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை