மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி தேர்தல் அக்டோபர் 17ல் நடக்கிறது. அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் விதிமுறைகள் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தன. இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. மேயர் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர் நடராஜனிடம் மனுத்தாக்கல் செய்யலாம். வார்டு கவுன்சிலருக்கான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய:
*மண்டலம் 1ல் வரும், 1-6 வார்டுகளுக்கு உதவிப்பொறியாளர் நாராயணன், 7-15 வார்டுகளுக்கு உதவிகமிஷனர்(பொறுப்பு) எம்.ஆர்.சாமி, 16-23 வார்டுகளுக்கு உதவிப்பொறியாளர் சேகர், *மண்டலம் 2ல் வரும், 24-30 வார்டுகளுக்கு எம்.ஜி.முருகேசபாண்டியன், 31-39 வார்டுகளுக்கு உதவிப்பொறியாளர் ரங்கநாதன், 40-49 வார்டுகளுக்கு உதவிப்பொறியாளர் குழந்தைவேலு, *மண்டலம் 3ல் வரும், 50-58 வார்டுகளுக்கு உதவிப்பொறியாளர் பெரியசாமி, 59-66 வார்டுகளுக்கு உதவிப்பொறியாளர் எம்.பாலமுருகன், 67-74வார்டுகளுக்கு உதவி கமிஷனர் என்.ஆறுமுகநயினார், *மண்டலம் 4ல் வரும், 75-83 வார்டுகளுக்கு உதவி கமிஷனர் பழனிச்சாமி, 84-92 வார்டுகளுக்கு உதவிப்பொறியாளர் பாஸ்கரன், 93-100 வார்டுகளுக்கு உதவி கமிஷனர் எஸ்.திருஞானசம்மந்தன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். மாநகராட்சி தேர்தல் அலுவலர் நடராஜன் கூறியதாவது: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில், தயார் நிலையில் உள்ளோம். வேட்புமனுத்தாக்கல் இன்று காலை முதல் தொடங்கும். உரிய அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்யலாம், என்றார்.