உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக ஓம் பிரகாஷ் மீனா நேற்று பதவியேற்றார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஜோத்பூரில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். 1996 இந்திய ரயில்வே பொறியாளர் சேவை பிரிவை (ஐ.ஆர்.இ.எஸ்.,) சேர்ந்த இவர், பயிற்சிக்கு பின் 1998ல் பணியில் சேர்ந்தார். ஆக்ரா, ஜெய்ப்பூர், பிகானிர் ரயில்வே கோட்ட பொறியாளர், வட மேற்கு ரயில்வேயில் ஸ்டேஷன் மேம்பாட்டு முதன்மைப் பொறியாளர் பதவிகளை வகித்தவர். கிழக்கு ரயில்வே கட்டுமான பிரிவில் சாலை பாதுகாப்பு திட்ட தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் மதுரை கோட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை