உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிய நீச்சல் போட்டியில் மதுரை மாணவி

ஆசிய நீச்சல் போட்டியில் மதுரை மாணவி

மதுரை: இந்திய நீச்சல் கழகம் சார்பில் அகமாதாபாத்தில் நடந்த தேசிய ஜூனியர் போட்டியில் மதுரை லீ சாட்லியர் பள்ளி மாணவி ரோஷினி பங்கேற்றார். 19 வயதுக்குட்பட்டோருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப்பதக்கம், 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் 4 x 100 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் வெண்கலம், 4 x 100 மீட்டர் ஐ.எம்., பிரிவு ரிலேயில் வெண்கலபதக்கங்களை வென்றார். இதன் மூலம் அகமாதாபாத்தில் செப். 28 முதல் அக். 10 வரை நடக்க உள்ள 11வது ஆசியா அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். மதுரையின் வரலாற்றில் ஏற்கனவே ஆசிய நீச்சல் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற விக்காஸ் என்ற வீரருக்கு அடுத்து ஆசிய போட்டியில் பங்கேற்கிறார் ரோஷினி. இவரை வழியனுப்பும் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை