உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முறைப்பாசனம் குறித்த முறையான அறிவிப்பு

முறைப்பாசனம் குறித்த முறையான அறிவிப்பு

மதுரை : மதுரையில் விவசாயிகளுக்கு முறைப்பாசனம் குறித்து கலெக்டர் சகாயம் முறையான அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கை: பெரியாறு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் இருபோக பாசன நிலங்களில் முதலாம் போகத்திற்கு ஜூன் 14 முதல் நடவுப்பணிகளுக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று வரை 45 நாட்களாக தண்ணீர் வருகிறது.நடவுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நீர் இருப்பு, இயற்கை ஒத்துழைப்பு, மழை மற்றும் அணைகளுக்கு நீர் வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஜூலை 28ம் தேதி காலை 6 மணி முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட உள்ளது. அன்று முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், 5 நாட்களுக்கு திறந்தும் சுழற்சி முறையில் விடப்படும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை