மதுரை ரயில்வே ஸ்டேஷனின் பிரதான நுழைவு வாயில் மூடல்
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. புதிய கட்டடம் கட்டுவதற்காக தற்போது கிழக்கு பகுதியில்உள்ள பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நாளை (நவ. 11) மதியம் 3:00 மணி முதல் பிரதான நுழைவு வாயில் மூடப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.பயணிகளின் வசதிக்காக தற்போது உள்ள டிக்கெட் முன்பதிவு அலுவலகம் அருகே தற்காலிக நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக முதல் பிளாட்பாரத்திற்கும் மற்ற பிளாட்பாரங்களுக்கும் எளிதாக செல்ல முடியும். இது சம்பந்தமாக உரிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, ஒரு விசாரணை கவுன்டரும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் பிரதான நுழைவு வாயில் வழியே பயணிகள் செல்வதற்கு தடையாக தடுப்புகள் வைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.