உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வயக்காட்டில் மக்காச்சோள விற்பனை

வயக்காட்டில் மக்காச்சோள விற்பனை

மதுரை : வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் சேடப்பட்டி விவசாயிகளின் வயலில் விளைந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்த கையோடு விற்பனை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.நீர்ப்பாசன வேளாண் மை நவீனமயமாக்கல் திட்டத்தின் தெற்காறு உபவடி பகுதியில் கொல்லம்பட்டி, சேடபட்டி விவசாயிகளுக்காக ஐராவதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் கீழ் ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். சேடப்பட்டி காளப்பன்பட்டி கிராம விவசாயிகள் பெரியகருப்பன், மைக்கேல்ராஜ், திருநாவுக்கரசு ஆகியோருக்கு இந்நிறுவனம் மூலம் மக்காச்சோள விதைகள், உரம், இடுபொருட்கள் விற்கப்பட்டன. தரமான விதைகளின் மூலம் போதுமான மகசூல் பெற்ற விவசாயிகளின் வயலில் மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டன.இக்கதிர்களை வயலிலேயே நிறுவனம் மூலம் எடையிடப்பட்டு உரிய விலை தரப்பட்டது. மொத்தம் 12 டன் கதிர்கள் ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மண்டி ஆய்வாளர் முகேஷ், மண்டி மதிப்பீட்டாளர் பிரசாத் மூலம் மக்காச்சோள கதிர்கள் அவர்களால் பண்ணை வாயில் முறையில் மக்காச்சோளம் விற்றுகொடுக்கப்பட்டதாக வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.விற்பனையின் போது வேளாண் அலுவலர் மீனா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ரஞ்சித்குமார், இயக்குநர்கள் பாண்டிகுமார், திருநாவுக்கரசு, தேசிய வேளாண் நிறுவன விற்பனை நிபுணர் அருள்குமார், சி.இ.ஓ., தலைமை செயல் அலுவலர் கவிகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை