மக்காச்சோளம் விதைப்பு
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மானாவாரி நிலங்கள் உள்ளன. அத்திபட்டி, குச்சேரி, சாப்டூர் வண்டபுலி, வண்டாரி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட் களுக்கு முன்பு நிலத்தை உழவு செய்து மழை பெய்தால் மக்காசோளம் விதைக்கலாம் என விவசாயிகள் இருந்தனர். இப்பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதையடுத்து மக்காச்சோளம் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.