உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலரை தாக்கியவர் கைது

கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலரை தாக்கியவர் கைது

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அடுத்த கச்சைகட்டி பெருமாள் நகர் ஞானசேகரன் 32. சமூக ஆர்வலர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கச்சைகட்டி, ராமையன்பட்டி பகுதி குவாரிகள் குறித்து தகவல் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பே 2 குவாரிகள் உரிமம் முடிந்தும் செயல்பட்டதும், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது குறித்தும் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.இந்நிலையில் டிச.20 இரவு அவரை அயோத்தி என்பவரது குவாரியில் டிரைவராக உள்ள முருகன் இரும்பு கம்பியால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். ஞானசேகரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். முருகனை 35, வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி