உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் அத்தையை கொலை செய்தவர் கைது

பேரையூரில் அத்தையை கொலை செய்தவர் கைது

பேரையூர் : பேரையூர் தாலுகா மங்கம்மாள்பட்டி ஜெயராமன். இவரது சகோதரி ராமுத்தாய் 60. ராமுத்தாய்க்கு திருமணமாகி சில வருடங்களில் கணவர் இறந்து விட்டார். இவருக்கு குழந்தை இல்லை. இவர் மங்கம்மாள்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொத்துக்கள் இருக்கிறது. இந்த சொத்துக்களை தனக்குத் தருமாறு ஜெயராமனின் மகன் தாமோதரன் 35. கேட்டுள்ளார். நேற்று ராமுத்தாய் வீட்டிற்குச் சென்ற தாமோதரன் சொத்துக்களை மீண்டும் கேட்க தர மறுத்த ராமுத்தாயின் கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொலை செய்தார். தாமோதரனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி