உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மணப்பட்டியில் 12 மாதங்களாக தண்ணீர் தொட்டியின்றி அவதி

மணப்பட்டியில் 12 மாதங்களாக தண்ணீர் தொட்டியின்றி அவதி

மேலுார்: மணப்பட்டியில் மேல்நிலை தொட்டி கட்டி 12 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராததால், பொதுமக்கள் தண்ணீரைத் தேடி அலையும் அவலம் நிலவுகிறது. இக் கிராமத்தில் வசிக்கும் எண்ணூறுக்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் போர்வெல் அமைத்து குடிநீர் வினியோகம் நடக்கிறது. இதில் கிடைக்கும் தண்ணீர் அதிக உவர்ப்பு, கடினத் தன்மையுடன் உள்ளது. காவிரி குடிநீர் வழங்க 12 மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் மேல்நிலைதொட்டி ரூ. 16.55 லட்சம் செலவில் கட்டி முடித்தனர். அத்துடன் சரி. இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் அந்தத்தொட்டி காட்சிப் பொருளாக உள்ளது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: அதிக உவர்ப்புடன் உள்ள தண்ணீரை பயன்படுத்துவதால் தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். தண்ணீருக்காக பல கி.மீ., அலைவதால் பொதுமக்கள் பணிகளுக்கோ, மாணவர்கள் பள்ளிக்கோ செல்ல முடியவில்லை. தொட்டி கட்டுமானப் பணிகள் முடிந்து 12 மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் தொட்டியில் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை