உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மா விவசாயிகள் பெருங்கவலை

மா விவசாயிகள் பெருங்கவலை

பேரையூர்: மாம்பழங்களுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.பேரையூர், சாப்டூர், சந்தையூர், கீழப்பட்டி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் நடக்கிறது. பிப்ரவரி ஆரம்பத்தில் பூக்கும் ஏப்ரல். மே, ஜூனில் மாம்பழம் சீசன் களை கட்டும்.இப்பகுதியில் கல்லாமை, செந்துாரம், அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந்த், சப்பட்டை ரகங்கள் அதிகளவில் விளைகின்றன.விவசாயிகளிடம் இருந்து உள்ளூர் வியாபாரிகள் கொள்முதல் செய்து மதுரை, தேனி, விருதுநகர் உட்பட பிற மாவட்டங்களுக்கும் கேரளாவுக்கும் அனுப்புகின்றனர்.இந்தாண்டு மாங்காய்க்கு போதிய விலை இல்லாமல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மா ரகங்களை பொறுத்து ரூ.10 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்படுவதால் பறிப்பு கூலி கூட இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனால் தோட்டங்களில் உள்ள மரங்களில் விளைந்த மாங்காய்களை சில விவசாயிகள் பறிக்காமல் விட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை