மஞ்சுவிரட்டு: 3 பேர் காயம்
அலங்காநல்லுார், : பெரிய ஊர்சேரியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தனர். ஒன்றிய செயலாளர் தனராஜ், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் பங்கேற்றனர். வடத்தில் பூட்டிய ஒரு காளைக்கு 20 நிமிடம், அதனை அடக்க 9 வீரர்கள் களம் இறங்கினர். காளை பிடிபட்டால் காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற 15 காளைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது. போட்டியின் போது 3 வீரர்கள் காயமடைந்தனர்.