உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்கா குப்பை சேகரிப்பு

மக்கா குப்பை சேகரிப்பு

மதுரை : மதுரை கோமதிபுரம் தென்றல் நகரில், வீடுதோறும் மட்கா குப்பை சேகரிக்கப்பட்டது. அப்பகுதி பசுமை மையத்தில் இருந்து 2மாதங்களுக்கு ஒரு முறை மட்கா குப்பை சேகரிக்கப்படுகிறது. அவ்வகையில், 200 கிலோ அளவிலான மட்கா குப்பையை குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் வீடுகளில்சேகரித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் மகாமாயன் மூலம் குப்பை வங்கிக்கு அனுப்பினர். சங்கத் தலைவர் ராகவன், உபதலைவர் சேது ராம், செயலாளர் ரகுபதி, இணைச் செயலாளர்கள் சங்கர், திரவியம், பழனிக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை