உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு

 பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு

உசிலம்பட்டி: கருமாத்துாரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 5 வது மதுரை மாவட்ட மாநாடு நடந்தது. மாநிலப் பொதுச் செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் தலைவர் மகேந்திரன், செயலாளர் வெண்மணிச்சந்திரன், பொருளாளர் தங்கமாயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். டிச. 28ல், தர்மபுரியில் நடைபெற உள்ள சங்கத்தின் 7 மாநில மாநாட்டில், கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்துள்ள சூழலில் லிட்டருக்கு பசும்பால் ரூ.45, எருமை பால் ரூ.60 என உயர்த்தி வழங்கவும், தரமான கால்நடை கலப்பு தீவனம் 50சதவீத மானிய விலையில் வழங்க கோரியும், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டியில் ஏற்றுவதற்கு முன்பு தரத்தையும் அளவையும் குறிக்க வேண்டும், மற்ற மாநிலங்கள் உள்ள ஐ.எஸ்.ஐ., பார்முலாவை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை