உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறுவட்ட எறிபந்து போட்டிகள்

குறுவட்ட எறிபந்து போட்டிகள்

எழுமலை: டி.கல்லுப்பட்டி குறுவட்ட அளவில் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் எறிபந்து போட்டிகள், எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.தாளாளர் பொன். கருணாநிதி, முதல்வர் ஆறுமுகசுந்தரி, தர்ம வித்யா பவன் பள்ளி முதல்வர் மேகலா துவக்கி வைத்தனர். 14, 17 மற்றும் 19 வயது மாணவர்கள் பிரிவில் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வென்றனர். மாணவியர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் டி.கிருஷ்ணாபுரம் அரசு உயர் நிலை பள்ளி மாணவிகள், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாணவியர், 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயசீலன், வாசிமலைக்கண்ணன், ராஜா தேசிங்கு போட்டிகளை நடத்தினர். குறுவட்ட அளவில் வென்ற மாணவர்கள் மதுரை மண்டல போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை