புதிய பாதாள சாக்கடை பணிகள் அமைச்சர் ஆய்வு
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1க்கு உட்பட்ட வார்டுகளில் நடந்து வரும் புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். மேயர் இந்திராணி, கலெக்டர் பிரவீன்குமார், கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தின் மெயின் பைப் லைன் பதிப்பு, தொட்டிகள், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அய்யர்பங்களா, காவேரி நகர், மீனாட்சி தெரு, மந்தையம்மன் கோயில் தெரு, மகாலட்சுமி நகர், பரசுராமபட்டி, காந்தி நகர், சர்வேயர் காலனியிலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் ரோடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம், கழிவுநீரேற்று நிலையங்கள் செயல்பாடுகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் முருகன், தியாகராஜன், கிருஷ்ணா பங்கேற்றனர்.