உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் சிறுபான்மையினர் நலத்திட்ட செயலாக்கம் ஆய்வு

மதுரையில் சிறுபான்மையினர் நலத்திட்ட செயலாக்கம் ஆய்வு

மதுரை: மதுரையில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் வரவேற்றார். சிறுபான்மையினர் நலத்திட்ட சிறப்பு குழு உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சுபேர்கான், உபதேசியார் வாரிய உறுப்பினர்கள் ஜெயப்பிரகாஷ், பிரபாகர், டி.ஆர்.ஓ., அன்பழகன், சிறுபான்மை அலுவலர் சண்முகவடிவேல் பங்கேற்றனர். தலைமை வகித்த சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா பேசுகையில், ''கடந்தமாதம் முஸ்லிம்கள் வெளிநாடு சென்று படிக்க 10 பேருக்கு ரூ.30 லட்சம் வழங்க உத்தர விட்டுள்ளது. சர்ச் பழுதுபார்த்தல், புனரமைத்தலுக்கு கட்டடத்தின் வயதை பொருத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் எனில் ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ.20 லட்சம் அரசு மானியமாக வழங்குகிறது'' என்றார். கலெக்டர் பேசுகையில், ''மாவட்டத்தில் உலமாக்கள், பணியாளர்கள் 532 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினருக்கு 2 ஆண்டுகளில் 335 பேருக்கு ரூ.2 கோடியே 61 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !